மாபெரும் இந்திய இதிகாசமான மகாபாரத்தில், சகுனி கதாபாத்திரம் முக்கியமானது. சூது, வஞ்சத்தின் தலைவனாக, சகுனி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சகுனியின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர்.
காந்தார நாட்டுத் தலைவன், காந்தாரியின் மகன், துரியோதனனின் தாய்மாமன் சகுனி என்ற அறிமுகம் சிறப்பாக உள்ளது. தான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற, பொறுமை காப்பதிலும், திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் சகுனி தீர்க்கமானவர் என்கிறார் ஆசிரியர்.
தங்கையின் வாழ்விற்காக, சகுனி செய்யும் காரியங்கள் அனைத்தையும், வாசிப்பவர் ஏற்கும்படி தர்க்க ரீதியில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
ஆசிரியர், ‘அக்கிரமங்களையும் ராஜநீதி அனுமதிக்கிறது என்றால், சகுனி செய்தது எதுவும் தவறாகாது; ஏனெனில், அவனும் ஒரு ராஜா தானே’ என்கிறார். புத்தகத்தில், வாக்கியங்கள் இடையே, அடிக்கடி, இரண்டு இரண்டு புள்ளிகள் இடம் பெற்றிருப்பது, வாசிப்பை தடுக்கிறது.
சகுனியை முழுமையாக அறிய வேண்டும் என்ற உந்துதலில் உருவான இந்த புத்தகம் முக்கிய இடம் பெறுகிறது.
– சி.கலா தம்பி