எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புனைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில், தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், செடி, கொடி, பூனை போன்ற பல்லுயிர்களின் மீதான பேரன்பு, ஒவ்வொரு எழுத்திலும் உள்ளது. குறிப்பாக, நாய் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. மொத்தத்தில், புதிய எக்ஸைல், புதிய தரிசனம்.