கர்நாடக மாநிலத்தின், மிகச் சிறந்த தலித் அரசியல், இலக்கிய செயல்பாட்டாளரான, டி.ஆர். நாகராஜின் கட்டுரை தொகுப்பு இது.
கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அம்பேத்கரும் காந்தியும், அரசியலும் கலாசார நினைவுகளும், அரசியலும் வன்முறையும் என, மூன்று தலைப்புகளின் கீழ், தலித் மக்களின் வாழ்நிலை குறித்து, இந்த புத்தகத்தில் விரிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தலித் அரசியல், கலை, இலக்கியம், இயக்கம் போன்றவற்றை தலித்துகள் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை, வலியுறுத்துகிறது. அடையாள அரசியலை கடந்து, நாகரிக தளத்திலான அரசியலுக்கும், சீற்றத்தின் அரசியலிலிருந்து நம்பிக்கை சார்ந்த அரசியலுக்கும் நகர்ந்து போக வேண்டும் என்ற கருத்தை இந்த புத்தகம் முன் வைக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல், இயக்கம், இலக்கியம் குறித்து, ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், ஆய்வாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.