இன்றைய நிலையில் பெண்கள், படித்து வேலைக்கு சென்று, தங்கள் சொந்த காலிலேயே நிற்கும் நிலைக்கு உயர்ந்து விட்டாலும், அவர்கள் சார்ந்த பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை.அவை, காலத்துக்கேற்ற படி வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கின்றன. அவற்றில், மாமியார் – மருமகள் பிரச்னையும் ஒன்று.
இந்த பிரச்னையை உலகளாவிய பிரச்னையாகவே இந்த நூலாசிரியர் பார்க்கிறார். மாமியார்களை ஐந்து வகையினராக பிரிக்கிறார். அவர்களை சமாளிப்பது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை தெரிவிக்கிறார். புதிதாக திருமணமான பெண்களுக்கு மட்டுமின்றி, மாமியாரை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பெண்களுக்கும் இந்த நூல் உதவும்.