ஆசிரியர்-மகேந்திரநாத் குப்தர் (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்) தமிழாக்கம்-சுவாமி தன்மயானந்தர்.வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-600 004. ஸ்ரீராமகிருஷ்ணர் (ம-விடம்): யோகியின் மனம் எப்போதும் இறைவனிடம் இருக்கும்.எப்போதும் ஆன்மாவிலேயே நிலைத்திருக்கும். பார்க்கும்போதே அவனை அடையாளம் கண்டுகொள்ளலாம். அவனது கண்கள், முட்டையை அடைகாக்கும் பறவையின் கண்கள் போல் எங்கேயோ பார்த்த வண்ணம் அகலத் திறந்திருக்கும், மனம் முழுக்க முழுக்க முட்டையின் மீது நிலைத்திருக்கும். கண்ணில் ஒரு வறட்டுப் பார்வையிருக்கும். அப்படிப்பட்ட ஒரு படத்தைக் கொண்டு வந்து காட்டுகிறாயா? (பக்.79). ஸ்ரீராமகிருஷ்ண மடத்துப் பதிப்பகத்தின் நூற்றாண்டு (1908-2008) சிறப்புச் சலுகை விலை ரூ.190 (மூன்று பகுதிகள்).