முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார், கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம். எல்லாமே நல்ல கதைகள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் – ஈஸ்வர அல்லா தேரே நாம்; நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதை சொல்லும் – நாய்க்குட்டி; பள்ளி ஆசிரியர்கள் ஏணிகளாகவும் இருக்கின்றனர்; கரை சேர்க்கும் தோணிகளாகவும் இருக்கின்றனர் என்பதை சொல்லும் – ஏணிகளும், தோணிகளும்; எல்லாருக்கும் கடிதம் சுமந்து சென்று வினியோகிக்கும் தபால்காரர்; ஆனால், அந்தத் தபால்காரருக்கு வரும் முதல் கடிதமே அதிர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது என்பதை சொல்லும் – முதல் கடிதம்; எழுத்தாளர்களிலும் சோரம் போகின்றவர்கள் இருக்கின்றனர் என்பதை விளக்கும் – சிவப்பு என்பது நிறமல்ல; முரட்டுக் கணவனை ஒரு மனைவி அன்பினால் வெல்லலாம் என்பதை வர்ணிக்கும் – வடிகால் போன்ற கதைகள், இந்தத் தொகுதிக்கு சிறப்பு சேர்க்கும்.
– எஸ்.குரு