ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல் தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால், செய்திகளை விட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில், முன்னிற்கின்றன.
அப்படி, போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல்.
அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் போன்ற வல்லரசுகளின் உலகப் போர்கள் துவங்கி, வியட்நாம், ஈராக், இலங்கை, கொரியா, லிபியா, சிரியா, கம்போடியா நாடுகளில் நடந்த போர்களின் முக்கியமான நிகழ்வுகளையும், அங்கு படங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணியையும் விளக்குகிறது. புகைப்படக்காரர்களை கொன்ற ராணுவத்தினர், குண்டடி பட்டு கீழே விழுந்தும், தொடர்ந்து புகைப்படம் எடுத்த ‘கெஞ்சி நாகை’ போன்ற கேமரா போராளிகள், ஒரு புகைப்படம் எவ்வாறு வியட்நாம் போரின் போக்கை மாற்றியது என்பது போன்ற செய்திகளையும் இந்த நூல் அடக்கி உள்ளது.
திரு