இந்த நூல், ஒரு நல்ல தகவல் களஞ்சியம். எல்லிஸ் ஆர்.டங்கன் உள்ளிட்ட இயக்குனர்கள் குறித்தும், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் குறித்தும், அறிஞர் அண்ணாதுரை உள்ளிட்ட கதை வசன ஆசிரியர்கள் குறித்தும், எம்.கே.டி., உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும், டி.பி.ராஜலட்சுமி உள்ளிட்ட நடிகைகள் குறித்தும், எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் குறித்தும், கண்ணதாசன் உள்ளிட்ட பாடல் ஆசிரியர்கள் குறித்தும், டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற பின்னணிப் பாடகர்கள் குறித்தும், சுருக்கமான வரலாற்றுக் குறிப்புகளை கொண்டிருக்கும் நூல்.
பாவேந்தர் பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கோவி.மணிசேகரன் போன்ற இலக்கியவாதிகளின் திரை உலக பிரவேசம் குறித்தும், இந்த நூல் சிறப்பாகப் பேசுகிறது.
பக். 174ல், டி.கே.ஷண்முகத்தின் படத்திற்கு, டி.கே.பகவதி என்று தவறாக, படவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
எஸ்.குரு