இந்திய தேசத்தில் தோன்றிய மகான்கள் அனேகர். அந்த அருளாளர்களின் சரித்திரத்தை அறிவது, நம்மை நல்வழிப்படுத்தி, அறத்திலும், ஆன்மிக மேம்பாட்டிலும் நிச்சயம் உயர்த்தும். பக்தியால் மேம்பட்டு, பரமன் அருளைப் பெற்று, அற்புதங்கள் பல நிகழ்த்திய பத்ராசல ராமதாசர், கபீர்தாசர், கோராக் கும்பர், சோகாமேளர், கனகதாசர், பக்த மீராபாய், ராகவேந்திரர், புரந்தரதாசர் போன்ற, 31 ஹரி பக்த சிரோன்மணிகளின் வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த நூல். இவர்களில், ௧௧ பேர் பெண்கள். இந்த நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளோரில், ராகவேந்திரர் தவிர மற்றவர்கள் அனைவரும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்த சிகாமணிகள்.
நீதி, நேர்மை, பக்தி, ஒழுக்கம், தியாகம் போன்ற உயரிய குண நலன்களைப் பிஞ்சு மனங்களில் பதியச் செய்ய உதவும் அருமையான நூல்.
பவானி மைந்தன்