மொத்தம், 38 கட்டுரைகள், 22 சிறுகதைகள் உள்ளடக்கி, பெரிதாய் வெளிவந்திருக்கிறது இந்த மலர்.
சுவாமி விமூர்த்தானந்தாவுடனான, இளைய சமுதாயத்தினரின் சந்திப்போட, மலர் துவங்குகிறது; இளைஞர்களின் கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்துள்ள விதம் அருமை!
‘எழில், இன்பம், இறை’ மற்றும், ‘கதை சொல்லும் கலை நகரம்’ ஆகிய பயணக்கட்டுரைகள், நம்மை வசீகரிக்கின்றன; நகரத்தார் பற்றிய பாராம்பரிய கட்டுரை, ரசிக்க வைத்துள்ளது. தேசிக விநாயகம் பிள்ளை, பாரதி, பாரதிதாசன் ஆகியோரில் யார், தமிழகத்தின் முதல் தேசிய கவி என்ற ஆய்வுக் கட்டுரை, விவாதம் செய்ய தூண்டும்.
கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டிய, அம்மணி அம்மாள், பத்ராசலம் தம்மக்கா, ராணி ராசமணி அம்மையார், சிவபிருந்தா தேவி உள்ளிட்ட பெண்கள் பற்றிய தொகுப்பை, பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம். முழுமையான ஆன்மிக மலராக வெளிவந்துள்ளது, விஜயபாரதம்.
சரஸ்வதி சின்னத்துரை