ஒரு விழாவைக் கொண்டாடவோ அல்லது ஒரு முக்கியச் சடங்கைத் துவங்க வேண்டியிருந்தாலோ, நல்ல நேரம் பார்த்துத் தான் எவருமே துவங்குவர். நன்மை செய்யும் கிரகங்களும், தீமை விளைவிக்கும் கிரகங்களும் உள்ளன. அதேபோல், சுப, அசுப நட்சத்திரங்களும், திதிகளும், கிரக நிலைகளும் உள்ளன. எனவே, அதற்கு அந்த நாளைப் பற்றிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் (பஞ்ச அங்கங்கள்) இவை யாவும், நன்மையளிக்கக் கூடிய நிலையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு, ‘எலக் ஷனல் அஸ்ட்ராலஜி’ என்று பெயர் சூட்டி உள்ளனர்.
அதைத் தெரிந்து கொள்வதற்காக, தொழில் முறை ஜோதிடம் ஒருவரின் உதவியின்றி, ஜோதிட சாஸ்திர விதிகளின்படி, நமக்கு நாமே உதவிக் கொள்ளும் வகையில், இந்த நூல் மிக விரிவாகவும், விளக்கமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மிகவும் பயனுள்ள நூல்.
மயிலை சிவா