தமிழகத்தின் அடிப்படை உணவு தானியமாக விளங்கும், நெல், அரிசியை பற்றிய நூல் இது. நவீன விவசாயம் வந்த பிறகு, புதிய புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் மூலம், மகசூல் பெருகியது. அது, வேளாண் அறிவியலில் விஞ்ஞான சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த நவீன விவசாயத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகள், நோய்கள் எண்ணிலடங்காதவை. அவற்றிற்கு மாற்று, தமிழக பாரம்பரிய நெல் ரகங்கள் தான் என்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, கிச்சிலிச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், கருப்பு கவுனி, காட்டு யானம் என, பல நெல் ரகங்களை பட்டியலிடுகிறார். மொத்தம், 153 பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்பையும், அதன் வரலாற்று பின்னணியையும் விளக்குகிறார். அத்துடன், இந்த அரிசி ரகங்களை சமைப்பது எப்படி என்பதையும் விரிவாக கூறியுள்ளார். அவற்றில் இருந்து, பாரம்பரிய உணவு பண்டங்களை தயாரிக்கும் முறையையும் விளக்கியுள்ளார். ஒவ்வொரு அரிசியும், எந்த வகையான உணவு பண்டம் தயாரிக்க சிறப்பானது; அதன் சமையல் முறை என்ன என்பதையும் கூறியுள்ளார்.
– ஜே.பி.,