திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமாருடன், 1976ம் ஆண்டு முதல் நெருங்கிப் பழகிய நூலாசிரியர், தம் அனுபவத்தை இந்த நூலில் தந்துள்ளார். மொத்தம், 57 அத்தியாயங்கள் எளிய நடையில், படிப்போரை கவரும் விதத்தில் அமைந்துள்ளன.
நூலின் பின் இணைப்பாக, யோகியின் சுயசரிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. யோகி, தன்னை நாடி வந்த பக்தர்களிடம், ‘கடவுளை அடைய நீ இதையெல்லாம் செய்ய வேண்டும்’ என்று வெறும் பக்தியை மட்டும் சொல்லவில்லை. வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள, ஒருவன் படிக்க வேண்டிய புத்தகங்களையும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒவ்வொருவருக்கும் சொன்ன புத்தங்களை, நூலாசிரியர் பட்டியலாக அளித்துள்ளார் (பக்.192–193). அதில், தொல்காப்பியம் துவங்கி, ரிச்சர்டு அட்டன்பரோவின் ‘காந்தி’ படம் வரையும் உள்ளன.
இந்த நூலை, வெறும் ஆன்மிக நூலாக மட்டுமின்றி, தத்துவம், வாழ்க்கை வழிகாட்டி, அனுபவம் என பல பரிமாணங்களிலும் விரிகிறது.
– கீதா