இரண்டாவது பதிப்பாக வந்துள்ள நூல். அனைத்து வகை மகாபாரத நூல்களையும், இந்த நூலாசிரியர் படித்துள்ளார். மகாபாரத பாத்திரங்கள் அனைவருமே நல்லவர்கள்; சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும், தனிமனித சுபாவமும் தான், ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டுகிறது என்கிறார்.
இந்த நூலில், துரியோதனின் நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்க நெறி, வீரம் போன்றவற்றை எடுத்துரைக்கும் நூலாசிரியர், அவனது கோபத்தால் மட்டுமே, அவன் கெட்டவனாக சித்தரிக்கப்பட்டதாக கூறுகிறார்.
‘துரியோதனன், பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் ஆகியோரை நேருக்கு நேராக கேள்வி கேட்டவன். அதனால் அவர்களால் வெறுக்கப்பட்டான். யுதிஷ்டிரனுக்கு மனதில் பயம் ஏற்படும் போது, தர்மத்தைப் பற்றி பேசுவான் என, அவன் தம்பி அர்ஜுனனே கூறியிருக்கிறான். துரியோதனனிடம் அதிகாரம் சென்று விட்டால், தங்கள் அதிகாரம் பாதிக்கப்படும் என, பீஷ்மர் உள்ளிட்டோர் கருதி, யுதிஷ்டிரனுக்கு வக்காலத்து வாங்கினர்’ என, பல வித்தியாசமான கோணத்தில், மகாபாரதத்தை அணுகியுள்ளார் நூலாசிரியர்.
கிரி