விண்கற்கள், எரி நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள், நிலவின் தோற்றம், பூமியின் வயது, சூரியனின் நிறை, பேரண்டத்தின் அளவு, ஒளியின் வேகம் மற்றும் ஒளி ஆண்டு, கோள்களின் பல்வேறு நிலவுகள் போன்ற எளிமையான வானியல் செய்திகளில் துவங்கி, குயப்பர் பட்டை, ஊர்ட் மேகங்கள், செவ்வாயில் உயிரினம் இருக்கிறதா, நகரும் கண்டங்கள், துருவ வெளிச்சம், தொலைதூரக் கோள்கள், உலகின் அதிவேக விண்கலம் போன்ற ஆழமான அறிவியல் செய்திகளை அறிய, இந்த நூலில் உள்ள 20 அத்தியாயங்கள், நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன. ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும், கூடுதல் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேல், ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ மூலம், அறிவியலை பொதுமக்கள் ரசிக்கும்படி பல அறிவியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை எழுதி அனைவரையும் கவர்ந்த நூலாசிரியரின் அனுபவம், நூல் முழுவதும் வெளிப்படுகிறது.
தரமாக, தெளிவான படங்களுடன் வெளியிட்டிருக்கும் பதிப்பகத்தாரை மனதார பாராட்டலாம்.
பை சிவா