காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் மடத்தின் சிஷ்யர் ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள், வேதத்தை பற்றியும், கலாசாரத்தை பற்றியும், வைதீக தர்மத்தை பற்றியும் பல நூல்களை தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். பெரியளவில் பிரபலமடைந்தது.
ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் வழங்கிய பதில் உரைகள் தெளிவாக உள்ளன. ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு, ‘வேதமும் பண்பாடும்’ (வேத வைபவம், ஆசார அனுஷ்டானங்கள் மற்றும் நமது கலாசாரம்). தமிழில் புது வடிவெடுத்து வைதீக நுணுக்கங்களையும், இந்து மதத்தின் சிறந்த பண்பாட்டையும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் எளிய நடையில் வழங்கிட மிகுந்த பிரயத்தனம் செய்திருப்பது தெரிகிறது.
இந்நூல் மூலம், வேதம் என்றால்... என துவங்கி மகான்களின் வழிகாட்டுதல்களை எளிய நடையில் இன்றைய சமுதாயத்தினருக்கு விளக்கம் கூறி இருப்பது சிறப்பாகும்.
கா.சுப்பிரமணியன்