ஸ்ரீமத் ராமானுஜரால் பாராட்டப்பட்டவர் திருக்கோளூர் பெண்பிள்ளை என்பவர். இவருடைய ஞானமும், பணிவும் ராமானுஜரை கவர்ந்தது. இவர் இயற்றிய நூலை, ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்பர். அச்சிறு நூலின் விரிவுரையாக இந்நூலை தந்துள்ளனர்.
ராமாயணம், மகாபாரதம், பாகவதக் கதைகளில் சிலவற்றை இந்நூலின், 81 கண்ணிகளில் இணைத்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
சீதாதேவிக்குத் தாயன்போடு அநசூயை அணிகலன்கள் பூட்டி மகிழ்ந்ததும் (பக்., 36), சிவபெருமானைக் கண்டுகொள்ளாத திருமழிசையாழ்வாரின் உறுதிப்பாடும் (பக்., 51), குலசேகராழ்வார் பாடல் கருத்துடன், ஊத்துக்காடு வேங்கட கவியாரின் பாடலை ஒப்பிடுவதும் (பக்., 56), லவன் – குசன் பற்றிய புதிய செய்தியாக தருப்பைப் புல்லில் இருந்து குசன் தோன்றினான் என்று கூறுவதும் (பக்., 96) ஆனந்தம் தருபவை.
நூலாசிரியரின் எளிய தமிழ் நடை, நூலைப் படிப்போக்கு மிகவும் ஆர்வம் கூட்டும்.
– டாக்டர் கலியன்சம்பத்து