ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னையின் சீடராக, 40 ஆண்டுகள் வாழ்ந்த டி.ஆர்.துளசிராம், ‘அருட்பெருஞ்ஜோதியும் மரணமில்லா தேகமும்’ நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். திருமூலர், வள்ளலார், அரவிந்தர், அன்னை ஆகியோர் கோட்பாடுகளை ஒப்பிடும் நோக்கில் எழுதிய அந்த நூலை, அவரது சகோதரர் டி.ஆர்.ஜவஹர்லால் எளிமையான தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளார்.
வடலுாரில் வள்ளலார் சத்ய ஞான சபையில், அருட் ஜோதியை மறைத்து அமைத்து இருக்கும், ஏழு வர்ண திரைகளின் தத்துவ உண்மைகளை, நூலில் அனைவரும் புரியும் வகையில், எளிமையான நடையில், மொழிபெயர்த்துள்ளது, படிக்க ஆர்வம் ஏற்படுத்துவதாக உள்ளது. ராமலிங்க சுவாமிகளின் ஜோதி அகவல் பாடல்களின் கருத்துக்கள், அரவிந்தரின் அரிய கருத்துக்கள், அன்னையின் மந்திர மொழிகள் ஆகியவற்றை, நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளது சிறப்பாக உள்ளது.
மேஷ்பா