ஜப்பானிய மானிடநேய அறிஞர் டாக்டர் டைசகு இகேடா மற்றும் காந்திய அறிஞர் டாக்டர் நீலகண்ட ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் புத்தகமாக உரு பெற்றிருக்கிறது.
புத்தகம் முழுவதும் மகாத்மாவின் வாழ்க்கை, அகிம்சை, பவுத்தம், உலக அரசியல், மத நல்லிணக்கம் குறித்த விலை மதிப்பற்ற கருத்துக்கள் விரவி கிடக்கின்றன.
மானிடரின் ஆழத்தில் இருக்கும் அறியாமையால் வெறுப்பும், கட்டுப்படுத்தப்படாத ஆசைகளும் எழுகின்றன. அதற்கு மாற்றாக நாம் எப்படி ஞானம், தீரத்தை வெளிப்படுத்தலாம் என, ஆலோசனை கூறுகிறது இப்புத்தகம். வன்முறையின் வேர் ஆராயப்பட்டுள்ளது.
சமய அறியாமையும், சகிப்புத் தன்மையும் ஒன்றல்ல. சமய சகிப்புத் தன்மை, பிற சமயத்தவரை காயப்படுத்துவதையும், அவர்களை ஒதுக்குவதையும் நிராகரிக்கிறது என்கின்றனர் இருவரும்.
நாடுகள், இன ரீதியான குழுக்கள், வெவ்வேறு சமயத்தைச் சேர்ந்தவர்கள், குடும்பங்கள், பெற்றோர், குழந்தைகள், நண்பர்கள் என, அனைத்து நிலைகளிலும் உரையாடல் தேவை. கலந்துரையாடல், பல துன்பத்திற்கு தீர்வை கொண்டுள்ளது என்பதை, இப்புத்தகம் சிறப்பாக விளக்கியுள்ளது.
– தினா