உலகளாவிய தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ்., எந்தவித கோட்பாடும், சித்தாந்தமும் இல்லாமல், ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த, 40 ஆயிரம் வீரர்களைக் கொண்டு உலகையே கொலைக்களமாக மாற்றி வருகிறது. இது, ஷியா எதிர்ப்பு என்ற ஒற்றை மந்திரத்தின் விளைவு மட்டுமே (பக். 103) கொண்டது.
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க சவுதி அரேபியாவைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம். ஆனால், அமெரிக்கா ஒருபுறமும், ரஷ்யா மறுபுறமுமாக முஸ்லிம் நாடுகளைப் பிரித்து தங்கள் வலிமையை முஸ்லிம்களை கொன்று குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்துக் கொள்கின்றன.
மத வெறியால் அழிந்து வரும் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் அரசியலையும், உள்நாட்டு யுத்த களங்கள் பற்றியும், மிக விரிவாக, ஏதோ ஒரு துப்பறியும் கதையைப் படிப்பது போன்ற சுவாரசியமான தகவல்களை, அரசியல் வரலாறுகளை விளக்குகிறது இந்நூல்.
–
பின்னலூரான்