இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூலில், கன்னடச் சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் (1891 – 1986) 15 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கதைகள், வெளிநாட்டில் நிகழ்ந்த பிரபலங்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.
கிரீஸ் நாட்டு புலூடார்க் பற்றிய, ‘பெயர் அழிவதில்லை’ இந்நாட்டு மனுநீதிச் சோழனை நினைவூட்டும் ஐர்லாண்டு, ‘தரும சேகவன் பிட்ஸ் ஸ்டீபன்,’ ஏப்ரல் 23ல் பிறந்து ஏப்ரல், 23ல் மறைந்த ஷேக்ஸ்பியர் சம்பந்தமாக, ‘ஆன் ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் மகரிஷியின் பிரம்பு மரங்கள்,’ எகிப்து நாட்டு அரசி, ‘ராணி ஹாட்ஷேப் சிடூ,’ பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் வால்டேரின், ‘விசித்திரக் காதல்’ இப்படியாக சுவையான நினைவுகள், நிகழ்வுகளைச் சிறுகதை
களாக வடித்துள்ளார் நூலாசிரியர்.
தொடக்க காலத்தில் சிறுகதை வடிவங்கள் எப்படி இருந்தன என்பதை அறிய இந்நூல் உதவும்.
– பின்னலூரான்