சட்டசபை அதிகாரங்கள், தனிப்பட்ட சட்டங்கள், சொத்துக்கள் பற்றிய சட்டம், ஒப்பந்தங்களுக்கான சட்டம், கிரிமினல் சட்டம், அவதுாறு சட்டம், சாட்சியங்களுக்கான சட்டம், சிவில், கிரிமினல் நடைமுறைச் சட்டம் என, ஒன்பது பகுதிகளைக் கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் ஜி.சி.வெங்கடசுப்பாராவ் எழுதியதின் தமிழாக்கம்.
கடந்த, 65 ஆண்டு களில் அரசியல் அமைப்புச் சட்டம் முதல், அனைத்து வகைச் சட்டங்களும் பெரும் மாற்றங்களைப் பெற்றுள்ளன. நடைமுறைச் சட்டங்கள், ஒப்பந்தச் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், மாற்றக்கூடிய உண்டியல் சட்டங்கள் இப்படிப் பலவும் திருத்தம் பெற்றுள்ளன.
முன்னாள் சபாநாயகர் க.ராஜாராம், 1959ல் முதன் முதலாக மொழிபெயர்த்த நூல் என்பதைத் தவிர, இன்றைய சட்ட நடைமுறைகள் மாற்றமடைந்த நிலையில் இது பொதுமக்களுக்குப் பயன் அளிக்குமா என்பது சந்தேகமே.
– பின்னலூரான்