‘ஓருயிர் ஈருடல்’ இப்படி ஒரு பதத்தை, அடர் காதலை பற்றி சொல்கிற தருணங்களில் பிரயோகப்படுத்துவது உண்டு. ஒவ்வொரு உயிரும் தனித்தன்மையோடும், தனக்கேயான அடையாளங்களோடும் உருக்கொள்கிறது. காதல் என்னும் ரசாயனத்தில் அவை சிக்கிக்கொண்டால், பல வேதி மாற்றங்களை அடைகிறது.
சித்தார்த், நிரஞ்சனா இருவரும் ஒருவரையொருவர் அப்படி நேசிக்கின்றனர். ஆனாலும், சித்தார்த்திற்கு, நிரஞ்சனாவை போல அந்த காதலை வெளிக்காட்டவே தெரியவில்லை. அந்த விஷயத்தில்அவன் எல்.கே.ஜி., அது குறித்த அபிப்ராயமே அற்றவனாக இருக்கிறான்.
அதற்காக அவன் பிரயத்தனப்படாமல் இல்லை. அவை அவனுக்கு அப்படியும் கைகூடுவதாயில்லை.
இறுதியில் அந்த புல்ளியை எப்படி கண்டடைகிறான். அந்த சந்தர்ப்பத்தை எப்படி உருவாக்குகிறான். அந்த பயணிப்பில் அவன் எப்படி காதலாகவே ஆகிப் போகிறான் என்பதே இந்த நாவலின் மையம். வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியும், அர்த்தமும் எதில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்லும் நிரஞ்சனா, சித்தார்த் கதாபாத்திரங்கள் என்றென்றும் நம்மிலும், நம்மோடு வாழ்கிற வரை, இந்த பிரபஞ்சம் வற்றாத ஈரம் மிக்கதாகவே இருக்கும்.