தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகம், 2016 – 2017ம் ஆண்டு வெளியிட்டுள்ள இரண்டு ஆண்டு பி.எட்., பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டத்தின்படி, ‘அறிவும் கல்வி ஏற்பாடும்’ என்னும் இந்நுால், ஆசிரிய மாணவர்களுக்குத் தேவையான அனைத்துத் தலைப்புகளிலும் முழுமையான செய்திகளை அறியும் நோக்கில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
பழைய பாடத்திட்டத்திலிருந்து மாற்றப்பட்டு, புதிய கருத்துக்களை ஆசிரிய மாணவர்கள் தெரிந்து கொள்ள அனைத்து தலைப்புகளிலும் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.
கல்வியின் அறிவுத் தோற்ற ஆராய்வில் அடிப்படைகள், கல்வியின் சமூக அடிப்படைகள், குழந்தை மையக் கல்வி, நாட்டுச் சார்பு, அனைத்துலக சார்பு, சமயச்சார்பின்மை, கல்வியும், மக்களாட்சியும், கல்வி ஏற்பாட்டின் பொருள், இயல்புகள்...
கல்வி ஏற்பாட்டின் வள மூலங்கள், கல்வி ஏற்பாட்டின் கொள்கைகள், படிமங்கள், கல்வி ஏற்பாட்டைச் செயல்படுத்துதல், கல்வி ஏற்பாட்டு மாற்றமும், புதுமைகளும் போன்ற தலைப்புகளில் மிகத் தெளிவாகி, ஆராய்ச்சி அமைப்போடு எழுதப்பட்டுள்ளது இந்நுால்.
ஆசிரிய மாணவர்களுக்கு மட்டுமின்றி முதல்வர்கள், கல்வியியல் பேராசிரியர்களுக்கும் இந்நுால் பயனுள்ள நுாலாக அமையும். இந்நுாலின் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
– முனைவர் க.சங்கர்