அறிவின் ஊற்றாக இருப்பது நம் சிந்தனைகளே ஆகும். சிந்திக்கச் சிந்திக்கத்தான் நம் மனது தெளிவு பெறும் என்பர். இந்நுால், 365 சிந்தனைகளைக் கூறி நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.
மூச்சைக் கட்டுப்படுத்துவது குறித்தும் (பக்.8), உணவு உண்ணும் முறை குறித்தும் (பக்.19), பொறாமை கொள்ளாதே எனக்கூறுவதும் (பக்.63), ‘நன்றே செய்’ -அதை இன்றே செய் என்று விளக்குவதும்(பக்.74), ‘அலார்பூர்’ என்ற ஊரின் பெயர் விளக்கம் அளிப்பதும் (பக்.148), நுாலாசிரி
யரின் சீரிய சிந்தனைகளுக்கு எடுத்துக்காட்டுகள். பழகு தமிழில் வெளிவந்துள்ள நல்ல நுால். அனைவரும் படித்துப் பயனடையலாம்.
–பேரா., டாக்டர் கலியன் சம்பத்து