இந்தியாவில் வர்க்கம், ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் உழைக்கும் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போரிடுவது தான் விடுதலைக்கு சிறந்த வழியாக இருக்கும்!
இத்தகைய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கருத்தியல், அமைப்புக்கான கோட்பாடு, செயல்படுவதற்கான வழிகாட்டல் ஆகியவற்றின் பங்களிப்போடு, பல்வேறு விபரங்களை தேடித் தெளிவு பெறுவதற்கான முயற்சிகளை கட்டுரை வடிவில் அளித்துள்ளார் நுாலாசிரியர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் என்பதோடு, ஆசிரியர் தனது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடு இதில் தெரிகிறது.
இந்நுால், நமது தமிழ்மண் மாத இதழில் தொடராக வெளிவந்து, அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டுள்ளது. கருத்தியல் நடைமுறை வழுவாது சமூகவியல் சார்ந்து களப்பணியாற்றி வரும் நுாலாசிரியர், அரசியலில் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் புலமை பெற்றவராக விளங்குவதை இந்த நுால் மூலம் முன்வைக்கிறார் என்பதில் எள்ளளளவும் சந்தேகமில்லை.
நல்ல தரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நுால், சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஆழ்ந்து படித்து, விவாதித்தால், சிறப்பாக அமையும்.
– மாசிலா குரு