‘தேவ்’ என்ற இளைஞன் கொரியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பங்கு கொண்டு செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றை அமைக்கத் திட்டம் தயார் செய்கிறான்.
ரகசியப் பயணமாக ஜப்பான் தீவு ஒன்றுக்குச் செல்லும் அவன், அங்கே திடீர் என்று ஏற்பட்ட சுனாமியில் சிக்கி நினைவிழந்து, காப்பாற்றப்பட்டு, இரண்டு நாட்கள் மயக்க நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறான்.
அப்போது அவனுக்கு வினோதமான கனவு வருகிறது. அவனுடைய மூளை, பிறவிகளைக் கடந்த மூளையாக செயல்பட துவங்கி விட்டது. கனவா, நனவா என்று சொல்ல முடியாத மயக்கப் பொழுதுகளில் அவன், இந்திய நாட்டில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் பற்றிய தொடர்ச்சியான சிந்தனை அலைகளால் அவதியுறுகிறான்.
அவனுக்கு கிடைக்கும் தகவல்களில் வேங்கை நங்கூரம் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக தெரிகிறது. கி.பி., 2040ல் மிஷன் மார்ஸ் என்ற பயணத்தில் பங்கேற்று, செவ்வாய்க்குச் சென்று அதைத் தெரிந்து வந்தால், வெளி உலகுக்கு பல விஷயங்கள் தெரியலாம்! ஆசிரியர் சாமர்த்தியமாய் முன்னும் பின்னுமாய் கால வெள்ளத்தில் நீந்திக் கதையைச் சொல்லி இருக்கிறார்.
–கேசி