இந்து மதத்தின் அமைப்பை சிங்காரவேலரும், அம்பேத்கரும் கேள்விக்குள்ளாக்கி, புத்த மதத்தை ஆதரித்தனர். ஜாதியாலும், மதத்தாலும், அரசியல் அலங்கோலங்களாலும் பிளவுபட்டுள்ள இன்றைய சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டிய, மாபெரும் அறிஞர்களின் வரலாற்று நிகழ்வுகளை செம்மையாக பதிவு செய்துள்ளது இந்நுால். தன்னலத்தை அறவே ஒதுக்கி நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்களின் சிறப்பைச் சொல்கிறது இந்நுால்.