நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சியில் சைவ, வைணவ சமயங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருத்தி. அவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுகிறாள். பரந்தாமன் மேல் அவள் கொண்ட பக்தியாகிய காதல், தமிழ்ப் பாசுரங்களாக மலர்ந்தன. அவை, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் தங்கத் தாம்பாளத்தில் மின்னும் வைரங்களாகும்.