மாவீரன் அலெக்சாண்டரின் குருவாக விளங்கியவர் அரிஸ்டாட்டில். பண்டைய கிரேக்கம் உலகிற்கு வழங்கிய பெரும் தத்துவப் பேரறிஞர்களில் ஒருவர்.
கி.மு., 367 அளவில் பேரறிஞர் பிளேட்டோவின் அகாடமியில் மாணவனாக சேர்ந்த அரிஸ்டாட்டில், அங்கு திறம்பட பயின்று, அங்கேயே ஆசிரியராகவும் விளங்கியவர்.
அரிஸ்டாட்டிலின் இந்த அரசியல் நுாலுக்கு, ஆங்கிலத்தில், 60க்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் வந்துள்ளன. இந்நுாலாசிரியர், அத்தனை மொழியாக்கங்களையும் ஊன்றிப் படித்து, 10 ஆண்டு கால உழைப்பில், இந்த மொழியாக்கத்தை தந்திருக்கிறார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
– மயில் சிவா