கதை வடிவில் கணிதத்தை வழங்கினால், கதையைப் போலவே கணிதமும் இனிக்கும் என்பதை இந்த நுாலைப் படிப்பவர்கள் உணரலாம். இந்நுாலில் மொத்தம் 15கதைகளும், ஒவ்வொரு கதையிலும் அதன் அமசங்களோடும் பொருந்தும் கணித சிந்தனைகளும் கையாளப்பட்டிருக்கின்றன.
முதல் கதையில், தோல்வியே கண்டிறாத கிரேக்க மாவீரன் அக்கிலஸுக்கு, ட்ரோஜன் போரில் என்ன ஆனது என்பதைக் கதையாகவும், அக்கிலஸின் பலவீனத்தை எண்களுடன் ஒப்பிட்டுக் கணிதமாகவும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
‘அச்சத்தின் உச்சம்’ என்ற கதையில், ஐரோப்பியர்கள் 13ம் எண் மீது கொண்டிருக்கும் பயத்தின் காரணங்களும், 13 பற்றிய மூடநம்பிக்கைகள் இன்றைக்கும் ஐரோப்பிய சமூகத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களும், 13ன் அற்புதக் கணிதப் பண்புகளும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
நுாலாசிரியர் ஒவ்வொரு கதையையும், கணித்ததோடு வெகு இயல்பாகப் பிணைத்திருக்கிறார். வாசகர்களுக்கு கணித ரீதியில் கதைகளை அணுகும் புதிய அனுபவம் கிடைக்கிறது.