ஆன்மிகத்திலும், வரலாற்றிலும் சிறந்து விளங்கிய, தமிழகத்தின் திருக்கோவில்கள் தமிழர்களின் நாகரிக சின்னங்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், ‘ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு’ என்னும் இந்த நுாலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று உள்ளது.
இந்த நுாலின், மூல தெய்வமான அங்காள பரமேஸ்வரி சமேத தாண்டவராயமூர்த்தி, அகோர வீரபத்திரர், காவல் தெய்வங்களான மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாள், பாவாடைராயன், இருளன், கருப்புசாமி, காட்டேரி அம்மன், பேச்சியம்மன், துாண்டில் வீரன், முன்னடியான் ஆகிய வழிபடும் தெய்வங்களின் தோற்றம் மற்றும் அதன் வரலாறுகளை மிக நேர்த்தியாக குறைவில்லாமல் சிறப்பாக எழுதியுள்ளார், இந்த நுாலின் ஆசிரியர்.
மேலும், ௩௨ பக்கங்கள் தெளிவான வண்ணப் படங்களை பார்க்கும் போது, கோவிலுக்கே சென்று வந்த சிறப்பாக மனம் எண்ணத் தோன்றுகிறது.
– முனைவர் க.சங்கர்