இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல்.
கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், 1899 வரை அவன் எழுதிய சிறுகதைகள், 1899 முதல், 1912 வரை எழுதிய சமூக சீர்திருத்த நாடகங்களும், சோஷியலிச கொள்கை தாங்கிய நாவல்களும், 1913 முதல் எழுதிய சொந்த அனுபவங்களும், ஞாபகக் குறிப்புகளும் என்ற மூன்று பகுதிகள் உண்டு.
இரண்டாவது பாகத்தில், ‘தாய்’ ஒரு புரட்சிக்காரியாக உருவெடுப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று புரட்சி பிரசுரங்களைச் சேர்ப்பிப்பதும், தன் மகனைப் போலப் பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும் விவரிக்கப்படுகிறது. கடைசியில் காவல் துறையின் இரக்கமற்ற வெறிச் செயல்களையும், ‘தாய்’ சந்திக்கிறாள்.
அது நடப்பது, ௧௯௦௭ம் ஆண்டு. ஒன்றுமே தெரியாத மவுடீகமாக இருந்து ஓங்கு புகழ் புரட்சி வீராங்கனையாக பாவெல் என்ற கம்யூனிஸ்ட் வீரனின், ‘தாய்’ நீலவ்னா உருமாற்றம் கொள்ளும், உன்னத வரலாறே தாய்!.
– எஸ்.குரு