தொல்காப்பியரின் பெயர் ஆராய்ச்சியில் துவங்கி, கல்வெட்டு எழுத்துக்கும், தொல்காப்பிய நுாற்பாவுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை, புலவர் செ.இராசு நுட்பமாக ஆய்வு செய்துள்ளார். உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கும் குடவோலை முறையை விளக்கி, இன்றைய தேர்தலுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இத்தகைய அரிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை ஆதாரங்களாக்கி இந்த நுாலை உருவாக்கியுள்ளார். ஆழமான செய்திகளுடன் கலந்த ஆய்வு நடையை இந்நுால் முழுவதும் பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர். இந்நுால், தொல்லியல் ஆய்வு வெளிச்சத்தை நம்மிடையே பாய்ச்சுகிறது.
– முகிலை ராசபாண்டியன்