முருகப் பெருமானைப் பற்றி அனைத்து விபரங்களும் மற்றும் முருகன் பாடல்கள் மூலமும் உரையோடு இணைந்த முழு நுால்!
சங்க இலக்கியங்களில் சரவணன், புராணங்களில் முருகன், பிள்ளைத் தமிழில் பிள்ளைப் பெருமான், சிற்றிலங்கியங்களில் சிங்கார வேலன், அருணகிரிநாதர் அருளிய அமுதம்,
சங்கரர் போற்றிய சண்முகன், கந்தன் திருக்கோலங்கள், யந்திரமும் மந்திரமும், முருகன் வழிபாடு என்று பல்வேறு தலைப்புகளில் நுாலாசிரியர் முருகன் பெருமையைப் பேசுகிறார்.
முருகப் பெருமானைப் பற்றி காளமேகப் புலவர் பாடிய பாடலும் உள்ளது. அதில், வினை போக்கும் ஒரே பொருள், ஒரகத்து செட்டியாராகிய முருகப் பெருமானின் திருப்பாத கமலங்களே என்ற கருத்து சிறப்பானது.
– எஸ்.குரு