பரதநாட்டியம், இந்திய நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு நடனம். அதிலும், இதில் தமிழகத்துக்கு பெரும் சிறப்பு உள்ளது. பரதநாட்டிய கலைஞர்களை அதிகளவில் தநதுள்ளது தமிழகம் தான்.
பரதநாட்டியம் என்றால் என்ன? அதில் காட்டப்படும் பாவங்கள், முத்திரைகள் என, பரதநாட்டியத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.
பரதநாட்டியம் கற்பவர்கள், கற்றவர்கள், இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகம், அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். தமிழாக்கம் செய்து இதை வெளியிட்டால், மேலும் சிறப்பாக இருக்கும்.
– சங்கர சுப்பு