கலியுக தெய்வமாக விளங்கும் ஸ்ரீவேங்கடவன் வழிபாட்டில், அவன் பெருமை கூறும், 108 திருநாமங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அத்திருநாமங்கள் வடசொற்களில் உள்ளன; அதன் பொருள் கூறும் நுாலாக, இந்நுால் வெளிவந்துள்ளது.
வேம்+கடம் என்று பிரித்து, ‘வேம்’ என்ற சொல்லிற்கு மோட்சம் என்றும், ‘கடம்’ என்ற சொல்லிற்கு ஐஸ்வரியம் – செல்வம் என்றும் பொருள் கூறுவர்.
வேம் என்றால் வெந்துவிடும் என்றும், கடங்கள் என்றால் கர்மங்கள் – பாவங்கள் என்றும், இங்கு வருபவர்களின் பாவங்கள் வெந்துபோகும் என்றும் பல பொருள் கூறியுள்ள உரையாசிரியரின் நுண்ணிய ஆழ்பொருள்அறிவு, நம்மை வியக்கவைக்கிறது.
– பேராசிரியர் கலியன் சம்பத்து