வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார்.
வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள்.
பல நுாற்றாண்டுகளுக்கு முன், ‘திருமலை திருப்பதி கோவில் வைணவத் தலம் அல்ல’ என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, வெங்கடேசப் பெருமாளுக்கு சங்கு சக்கரத்தை ராமானுஜர் நிறுவினார். இந்த தகவல் பலரது சந்தேகத்திற்கு விடையாக நுாலில் பளிச்சிடுகிறது .
கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன், திருமலை மேல் பலநுாறு இசைப்பாடல்கள் பாடியவர் வேங்கமாம்பா. இன்று இவர் பாடலோடு தான் திருப்பதி நடை சாத்தப்படுகிறது. மொத்தத்தில் வைணவ பக்திக் களஞ்சிய நுாலாகும்.
– முனைவர். மா.கி.இரமணன்