முதல் பக்கத்தில், வேழ முகத்தானும், பக்கத்தில் காஞ்சி பெரியவரும் நிற்கும் படம், நம்மை வரவேற்கிறது. புத்தகம் முழுக்க, கருப்பு – வெள்ளை பக்கங்களாக இருந்தாலும், தரமான தாளும், அச்சும் தெளிவாக உள்ளது. இதழில் இடம்பெற்றுள்ள படங்களும், கருப்பு – வெள்ளை தான். அந்த குறை தெரியாமல், மாருதி மற்றும் ஸ்யாமின் ஓவியங்களும், புகைப்படங்களும் வெளியாகி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என, ஏராளமான விஷயங்கள், இதில் அடங்கியுள்ளன.
பொதுவாக வார, மாத இதழ்கள் வெளியிடும் மலர்களில் இருந்து வித்தியாசமான முயற்சி இது, சிங்கப்பூர் தமிழின மக்களுக்கும் சென்றடைய தலைப்பே வித்தியாசமாக உள்ளது.