ஆசிரியர்-ப.திருமா வேலன். தென்திசை வெளியீடு,கேகே புக்ஸ் பி.லிட்.,19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:144.இந்தியா சுதந்திரமடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும் பிந்தைய ஆண்டும் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கருப்புச்சட்டை போடாத ஈ.வே.ராமசாமியாக சில பத்திரிக்கைகளால் முத்திரை குத்தப்பட்டார்.இதையே காரணமாக காட்டி நடந்த அடிவெட்டு வேலைகளால் சில காங்கிரஸ் பிரமுகர்களாலேயே அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.இதை விமர்சித்து திராவிடநாடு இதழில் அண்ணா எழுதிய தலையங்கம் அரசாங்கத்தால் ஜாமீன் கேட்கப்பட்டது.நீதிமன்றத்தின் படியேறிய அண்ணா,தனது எழுத்தில் வகுப்புவாதம் இல்லை என தீர்ப்பு பெற்ற காலத்தை விவரிக்கிறது இந்நூல்.