அறிஞர்களின் ஆளுமைகளை முன் நிறுத்தும் நுால். பாரதியும் இதழ் இயலும் என்ற கட்டுரை, எழுதுகோலும் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்பதை நிரூபிக்கிறது. சுதேசமித்திரன் துணை ஆசிரியராக, 17 ஆண்டுகள் அவர் எழுதுகோல் ஓயவில்லை. கேலிச் சித்திரம் வெளியிட்டவர். வாசகர் அனுப்பும் செய்திகளுக்கு சன்மானம் கொடுத்தது முதன் முதலில் பாரதி தான்.
சிறுகதை உலகின் சிகரத்தை எட்டிய புதுமைப்பித்தன் பற்றிய ஆளுமைக் கட்டுரை மிகவும் அருமை. சிறுகதை என்றால் சிக்கல், பின்னல், எழுச்சி, முடிவு இவற்றுக்கு அப்பால், மன அவசரத்தின் எழுச்சி தான் என்பதை புதுமையாக விளக்கியுள்ளார்.
இதழியல் வரலாற்றில் தமிழகத் தலைவர்கள் நடத்திய இதழ்களின் பட்டியல் மிக அரிய தகவலாகும். தமிழ் இலக்கிய சிகரங்களையும், சிந்தனை உயரத்தையும் அளந்து காட்டுகிறது. சென்ற தலைமுறை எழுத்தாளர்களின் ஆளுமைக் களஞ்சியம்.
– முனைவர் மா.கி.ரமணன்