தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது. சினிமாகவும் வந்து கவர்ந்தது. அவர் சிறந்த கவிஞராகவும் இருந்தார். அவர் புனைந்துள்ள கவிதைகளை, தொகுத்து நுாலாக்கியுள்ளார், அவரது மகள் லஷ்மி. இரு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
முதல் தொகுதியாக உள்ள புத்தகத்தில், பண்டிகை, அறிவுரை, காதல், நாட்டு நடப்பு, நாட்டுப்பற்று என்ற பொருண்மைகளை பேசுகிறது. எளிய நடையில் அமைந்துள்ளன. ‘கார் ஓட்டும் சார் கேளும் என் சொல்லை இதை கவனித்து நடந்தால் விபத்தில்லை...’ என்று துவங்குகிறது ஒரு கவிதை.
இரண்டாம் தொகுதியாக உள்ள புத்தகத்தில், மூன்று பொருண்மைகளில் யாக்கப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. எளிய சந்தத்தில், வாழ்வு அறத்தை வலியுறுத்தும் நுால்.