அகத்திய முனிவர் தரிசித்த திருத்தலங்களை வரிசைப்படுத்தி, தொகுத்து வழங்குகிறது இந்த நுால். வளையல் செட்டியாராக முருகன் காட்சி தந்த செட்டிக்குளத்தின் முழு வரலாறு; பாவங்கள் போக்கும் பாபநாசம்; குரு சீடன் முறையில் சுந்தருக்கு உபதேச இடமான நாதேஸ்வரர் திருக்கோயில்; அகத்தியர் ஈயாக மாறி வழிபட்ட இடம்; அகத்தியருக்கு மருத்துவக் குறிப்புகளை வழங்கிய மருந்தீஸ்வரர் கோவில்; வேதங்கள் வழிபட்ட தலம் வேதாரண்யம்; முருகப் பெருமான் சிங்காரவேலராக அருள்புரியும் சிக்கல் போன்ற தலங்களை விளக்குகிறார்.
முழுமையான தல வரலாறு, பிரார்த்தனை, நேர்த்திக்கடன், கோவில்களுக்குச் செல்லும் வழி, வழிபாட்டு நேரங்கள், தொலைபேசி எண்கள் என முழுமையான வழிகாட்டு நுாலாக திகழ்கிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்