கண்ணன் போர்க்களத்தில் சொன்னவை அர்ச்சுனனுக்கு மட்டுமல்லாது, உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவர்க்கும் பொருந்தும். அப்படிப்பட்ட கீதையின் கருத்துகளை மிக எளிய தமிழில் விளக்கிக் கூறுகிறது.
முதல் ஆறு அத்தியாயங்கள் கர்ம யோகத் தத்துவங்களையும், ஏழு முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் பக்தி யோகத் தத்துவங்களையும்,பதிமூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்கள் ஞான யோகத்தையும் கூறுவதை, மிக அருமையாக, ஒவ்வொரு ஸ்லோகத்தின் வரிசை எண் குறித்து விளக்குவது, படிப்போர்க்கு மிகவும் பயன்படும்.
‘தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்’ என்று சஞ்ஜயனின் மங்களத்துடன் நூலை நிறைவு செய்வது புலமைக்குச் சான்று ஆகும். இறுதியில், ரேவதி நட்சத்திரத்தின் கதையை அறிவியல் விளக்கத்துடன் கூறுவது வியக்க வைக்கிறது. பாதுகாக்க வேண்டிய நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து