திருவாசகத்தில் மெய்ப்பாடு என்னும் பொருண்மையில் அமைந்த இந்நூல், திருவாசகத்தில் இடம்பெறும் பாடல்களை கவித்துவம் மிக்கதாகவும், பொருள் புலப்பாட்டுத்தன்மை மிக்கதாகவும் மாற்றும் திறன் மெய்ப்பாட்டுக்கிருப்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நுாலாசிரியர் நிறுவுகிறார். தமிழில் தமிழ் மண்ணைப் போற்றும் ஆய்வு முறைகள் உருவாகவேண்டும்.
தமிழிலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டு தமிழிலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கு வளர வேண்டும் என்ற நுாலாசிரியரின் விழைவு நுால் முழுவதும் இழைந்தோடக் காணலாம்.
இலக்கியமும் மெய்ப்பாடும், காலந்தோறும் மெய்ப்பாடு, திருவாசகத்தில் மெய்ப்பாடு என்ற கோணத்தில், வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நுாலாசிரியர் இலக்கிய ஆக்கத்திற்குக் கொடை அளிக்கும் விதமாக நுாலை எழுதிச்செல்கிறார்.
– ராமலிங்கம்