பெண்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல். கல்லுாரி, பல்கலைக் கழகத்தைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. கல்லுாரி பேராசிரியர், மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை விவாதிக்கிறது. அமைப்பிலும் வேறுபட்டு, மின்னஞ்சல் மூலம் கதையை நகர்த்திச் சென்றுள்ளார்.
கிட்டத்தட்ட 13 சிறுகதைகளின் தொகுப்பு என்று கூறுமளவு பெண்களின் வாழ்க்கையை வாதிக்கிறது. இன்றும் பெண்கள் முடங்கியே கிடப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. வீறுகொண்டு துணிந்து பாதையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களையும் கூறுகிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்