இந்திய பொருளாதார வளர்ச்சியில், பொதுத் துறை நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தனியார் பங்களிப்புக்கான கொள்கை, திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. சுயதொழில் துவங்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், அதை தொடர்ந்து நடத்துவதற்கான ஆலோசனை மிக முக்கியம். இதை விரிவாக விவரிக்கிறது இந்த நுால். தொழில் பயிற்சி, திட்டமிடல், வங்கி கடன், சட்டம், ஏற்றுமதி போன்றவை குறித்த, 17 தலைப்புகளில் திட்ட நிபுணர்கள் விளக்குகின்றனர்.
தொழில் துவங்கும் முன், தெரிந்து கொள்ள வேண்டிய வரவு – செலவு, உற்பத்தி திறன், சந்தை அமைப்பு, இலக்கு, நஷ்டத்தை கையாளுதல், தரம், கார்ப்பரேட் நிறுவனங்களின் வழிமுறை போன்ற பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
தொழில் துவங்கி வெற்றியாக நடத்திக் கொண்டிருப்போரை, உதாரணம் காட்டி விவரிக்கிறது. புதிதாக தொழில் துவங்குவோர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்