அகத்திய முனிவர் பெருமைகளை விளக்கும் நுால். அனுமனால் சஞ்சீவிபர்வதத்தின் ஒரு பகுதி, சதுரகிரி மலையில் வைக்கப்பட்டதென்றும், அங்கு பாறைகளே சித்தர்களாக மாறினர் என்றும் கூறுகிறார். சித்தர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மாவை வணங்கிய பின், அனுமனிடம் வாழ்த்து பெற்றனர் என்கிறார். நந்தி தேவர் சித்தராகி, அசுரர்களை மரம், செடிகளாய் மாற்றினார் என்றும் எழுதியுள்ளார். – டாக்டர் கலியன் சம்பத்து