மகான் ராகவேந்திரரின் வாழ்க்கை நிகழ்ச்சி, சடங்கு, அற்புதங்களை விளக்கும் ஆங்கில நுால். ஸ்ரீரங்கம் உத்திராதி மடத்தில் பூஜை செய்து வந்த குருபிரசாத், கிரந்தாலயா சென்று வந்த பின், மடத்தில்மந்திராட்ஷையின் நிறம், ராகவேந்திர சுவாமி மடத்தின் மந்திராட்ஷை போல் மாறிய அதிசயம் விவரிக்கப்பட்டுள்ளது.
சாதுர்மாத விரதங்கள் தமிழில் சூரியன் நகர்வுப்படியும், மாத்வர்கள் கணக்கில் தெலுங்கு, கன்னட மாதங்கள், சந்திரன் நகர்வுப்படியும் இருப்பதை விளக்குகிறது. ராகவேந்திரரின் ஐந்தாவது ஸ்லோகம் மனித வாழ்க்கையில் பிறவியாகிய கடலைக் கடக்கும் பாலமாக விளங்கும் என்பதை தெளிவாகக் கூறுகிறது. இதில், திருக்குறளை ஒப்பிட்டு விளக்கும் ஆசிரியரின் ஆய்வு நுட்பம் வெளிப்படுகிறது. ராகவேந்திரர் அருளால் நடைபெற்ற அற்புதங்களையும் விளக்கியுள்ளது பரவசப்படுத்தும் வகையில் உள்ளது.
– டாக்டர் கலியன் சம்பத்து