முகப்பு » வரலாறு » தண்ணீர்... கண்ணீர்...!

தண்ணீர்... கண்ணீர்...!

விலைரூ.320

ஆசிரியர் : நடுவூர் சிவா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘இதற்காகத்தானா மெனக்கெட்டாய் தமிழா’ என்ற தலைப்பில், ‘தினமலர்’ நாளிதழில் நடுவூர் சிவா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘தண்ணீர்... கண்ணீர்’ என்ற நுாலாக வெளிவந்துள்ளது. சோழர் காலத்தில் நீர் ஆவியாவதைக் குறைக்க நீர்நிலைகளின் கரைகளில் கடம்ப மரங்களை வளர்த்தனர். பாண்டிய நாட்டில் சில ஏரிகளுக்கு, ‘ஏந்தல்’ என பெயரிட்டிருந்தனர் போன்ற பல்வேறு செய்திகள் சுவாரசியமானவை.

பண்டைய காலத்தில் நீர் மேலாண்மையை கையாண்ட விதம், நீர் பங்கீடு செய்வதற்கான அமைப்புகள் கட்டுமானங்கள் ஆகியவற்றின் பெயர்கள் ஆதாரங்களுடன் தரப்பட்டு உள்ளன. கொங்கு நாட்டில் கீழ்ப்பகுதி பாதிக்கும் என்பதால், மேல் பகுதியில் அணை கட்ட வேண்டாம் என்ற சிந்தனை இருந்ததையும் ஆதாரத்துடன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

பண்டைய காலத்தில் குளங்கள், கண்மாய்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டன; மேலாண்மை செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்கள் பல ஆராய்ச்சி நுால்களில் வெளிவந்துள்ளன. இருப்பினும், கிணறுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன என்னும் விபரம் இந்நுாலில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

மழை நீரை சேகரிக்க சுரங்க நீர்த்தேக்க தொட்டிகள், நீரேற்றம் செய்தல் போன்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்த செய்திகள், தற்போதுள்ள நீர் தேவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான அணுகுமுறை ஆலோசனைகளாக அமைந்துள்ளன.

அறிவியல் பார்வையிலும் முக்கியமான விபரங்களை அளித்துள்ளது. காவிரி வடிநிலத்தில் உள்ள பிரச்னைகள், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அளிக்க வேண்டிய நீர் அளவு பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

பருவ காலத்துக்கு ஏற்ப காவிரியில் தண்ணீர் திறந்தது, கர்நாடகா திறந்த நீரின் அளவுகள் குறித்த புள்ளி விபரங்களை சரிபார்த்திருக்கலாம். சில ஆண்டுகள் மட்டும் கடலுக்குச் செல்லும் நீரின் அளவை கணக்கிட்டு, எந்த நிலையான முடிவையும் எடுக்க முடியாது என்பதையும் அறிய வேண்டும்.

இது போன்ற நுால்கள் நீரின் முக்கியத்துவம் மற்றும் வருங்காலத்தில் நீர் தேவையை பூர்த்தி செய்ய, அரசு இயந்திரம் மட்டுமின்றி மக்கள் சக்தியும் இணைந்தே செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் என்பதில் ஐயமில்லை.

இரா.சுப்பிரமணியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us